ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்க இணக்கம்!!

Read Time:1 Minute, 43 Second

17714314911325175176law statue02இலங்கை ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்குவது தொடர்பான முறைப்பாட்டை தீர்த்து வைக்க முடியும் என சட்டமா அதிபர் இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் 292 பேர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச சட்டத்தரணி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

இவ்வருடம் மார்ச் மாதம் தொடக்கம் சம்பள நிலுவையுடன் அவர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்க முடியும் என அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை நிராகரித்துள்ள ஊனமுற்ற இராணுவ வீரர்களின் சங்கம், ஊனமுற்ற வீரருக்கு ஓய்வு பெற்ற தினத்தில் இருந்து சம்பள நிலுவை வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்குடன் தொடர்புடைய இரு தரப்பினருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு நவம்பர் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்? நீதிபதி குன்கா விளக்கம்!!
Next post உலகின் மூத்த கோமாளி கலைஞன் 98 வயதில் மரணம்!!