மெக்சிகோவில் காணாமல் போய் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தந்தையுடன் சேர்ந்த பெண்!!

Read Time:1 Minute, 47 Second

a47dc83e-eeae-4ab9-8d93-214c061ac72a_S_secvpfமெக்சிகோவில் 12 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாரால் கடத்தப்பட்ட பெண் ஒருவரை அமெரிக்க-மெக்சிகன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சப்ரினா என்று பெயர் கொண்ட அப்பெண் கடந்த 2002 ஆம் ஆண்டு நான்கு வயதிருக்கும்போது அவளது தாயாரால் கடத்தப்பட்டார்.

அப்பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் மெக்சிகோவில் இருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள எல்டாபேடா ட்ளாக்ஸ்கலா என்ற நகரத்தின் அருகே தாயும் மகளும் இருப்பதை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். தற்போது அப்பெண்ணுக்கு 17 வயதாகிறது. தனது மகள் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக வரும் செய்தி தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என அப்பெண்ணின் தந்தையான க்ரெக் அல்லன் கூறினார்.

இதற்காக எனது ஒட்டு மொத்த குடும்பமும் மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது என க்ரெக் கூறியுள்ளார். க்ரெக்குக்கும் அவரது மனைவி டாரா மேரி லோரென்சுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டபோது சப்ரினா தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2002 ஆம் ஆண்டு பெற்ற பெண்ணை டாராவே கடத்திகொண்டு போய் விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மூத்த கோமாளி கலைஞன் 98 வயதில் மரணம்!!
Next post சிங்கப்பூரில் இந்தியப் பெண் ரூ.8 கோடி முறைகேடு!!