யாரையும் பார்க்கவில்லை: ஜெயிலில் தனிமையை விரும்பும் ஜெயலலிதா!!

Read Time:2 Minute, 33 Second

7d906b63-b1d1-4773-8909-e27540ebe041_S_secvpfஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு அறை எண் 23 ஒதுக்கப்பட்டுள்ளது. இது 12க்கு 18 அடி கொண்ட சிறிய அறையாகும்.

இந்த அறை சிறியது என்பதால் அசவுகரியமாக இருப்பதாக கூறி பெண்கள் வளாகப் பகுதியில் முதல் மாடியில் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இது பற்றி கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெய சிம்ஹா கூறும்போது, ‘‘ஜெயலலிதா 27–ந் தேதி எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில் தான் தொடர்ந்து இருக்கிறார். அவர் சிறப்பு சலுகை கேட்கவும் இல்லை. நாங்கள் கொடுக்கவும் இல்லை’’ என்றார்.

என்றாலும் சிறைதுறை வட்டாரங்களில் விசாரித்த போது, ஜெயலலிதா தனக்கு வேறு அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், தனிமையில் இருக்க விரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறினார்கள். இதனால் அவர் முதல் மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர். அங்கு யாரையும் சந்திக்க மறுத்து தனிமையில் இருக்கிறார்.

ஜெயிலில் வழங்கப்படும் உடைகளை அணிய மறுத்துவிட்டார். அவரது சொந்த உடைகளையே அணிகிறார். எலுமிச்சை சாதம், தயிர், பழங்கள் சாப்பிடுகிறார். இளநீர் குடிக்கிறார். ரொட்டி, பால் போன்றவற்றையே சாப்பிடுகிறார். காலையில் ஜெயிலில் வழங்கப்படும் வழக்கமான அரிசி உணவுகளை தவிர்த்து விடுகிறார். அவருக்கு ஏர்கூலர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் காலை–மாலையில் வாக்கிங் செல்லவில்லை என்று சிறை துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண்!!
Next post பிரிட்டன் பிணைக் கைதி கொலை: பயங்கரவாதிகளுக்கு ஒபாமா கண்டனம்!!