By 5 October 2014 0 Comments

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!!

8d9c2db1-3a76-4c53-b281-d9642f8fa774_S_secvpfவத்தலக்குண்டு அருகில் உள்ள இந்திராநகரை சேர்ந்த சுப்ரமணி மகள் கனிமொழி(வயது17). சுப்ரமணி இறந்துவிட்டார். கனிமொழி தனது தாயாருடன் வசித்து வருகிறார். வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். தினசரி கடைக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று கனிமொழி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பழையவத்தலக்குண்டு மேற்குத்தெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா(24) என்பவர் கனிமொழியை வழிமறித்து உனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார். தான் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் விடுவதாக கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார்.

வத்தலக்குண்டு – திண்டுக்கல் ரோட்டில் தனியார் லாட்ஜ் அருகே இருந்த கரட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றார். அவர் கூச்சல் போட்டு தப்பிக்க முயன்றார். இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு கருப்பையா தப்பி ஓடிவிட்டார். வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam