பாலமேடு கடை வீதிகளில் குரங்குகள் அட்டகாசம்!!

Read Time:2 Minute, 32 Second

9a4a31db-f8c4-405a-ab88-4383bdef5cfd_S_secvpfமதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி பஸ்நிலைய பகுதிகளில் நூற்றுக்கு அதிகமான கடைகளும், ஒட்டல்கள், வணிக வளாகங்களும், சாலை ஒரக்கடைகளும் அதிகமாக உள்ளது.

இங்கு எப்பொழுதும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், வெளியூர் வேலைகளுக்கு செல்லும் பயணிகளும் அதிகமாக பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இடமாகும்.

இப்பகுதியில் உள்ள கடைகளில் கூரைகளின்மீது குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு கடைகளுக்கு வருவோர்களையும், சாலைகளில் செல்வோர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாலமேடு அருகே உள்ள தெத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரத்தில் வீட்டிற்குள் புகுந்து தொட்டிலில் தூங்கிய குழந்தையை குரங்குகள் கடித்து குதறியது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் வனத்துறைக்கு புகார் தெரிவித்து இதுவரை குரங்குகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் தற்போது பாலமேடு பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ– மாணவிகளும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வோர்களிடமிருந்து குரங்குகள் பறித்து போவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதனால் வனத்துறைக்கு குரங்குகளை அப்புறப்படுத்த அதற்கான இரும்பு கூண்டுகள் வைத்து உடனடியாக பிடிக்க வேண்டுமென்று மாவட்ட வனத்துறை நிர்வாகத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் பாலமேடு பேரூராட்சி நிர்வாகமும், கிராமமக்கள், மற்றும் வியாபாரிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் கைது!!
Next post சோழவந்தானில் காதல் மனைவி மீது தாக்குதல்: கணவர் மீது புகார்!!