2 லட்சம் கோடி செலவில் கழிவறைகள்!!

Read Time:2 Minute, 0 Second

1763937296venkaiah-naiduமத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடு முழுவதும் சுகாதார திட்டம் தீவிரப்படுத்தப்படும். இதற்காக ‘சுகாதார இந்தியா’ என்ற பெயரில் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் ராமகிருஷ்ணா மிஷன் போன்ற தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

மேலும் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களையும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட அணுகி உள்ளோம். இதில் பொதுமக்களும் பங்கெடுத்து ஒத்துழைப்பு கொடுத்தால் தான் சுகாதார இந்தியா திட்டத்தை செயல்டுத்த முடியும்.

எனவேதான் மக்களுக்கு முன் உதாரணமாக பிரதமரும், மத்திய மந்திரிகளும் கையில் துடைப்பம் ஏந்தி சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.

அடுத்ததாக நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடியில் கழிவறைகள் கட்டி கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப் பகுதியிலும், நகர்ப் பகுதியிலும் கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும். இதில் நகர்ப்பகுதியில் கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டம் ரூ.30 கோடியில் செயல் படுத்தப்படும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவம்பர் 10 ஸ்கைப்புக்கு மூடுவிழா?
Next post மனைவியுடன் விவாகரத்து: பெற்ற மகன்களை கொன்ற தந்தை தானும் தற்கொலை!!