மீனவர்களை விடுவிக்கும்படி தமிழக முதல்வர் கடிதம்!!

Read Time:3 Minute, 40 Second

128623445Untitled-1இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் இருந்து கடந்த 6–ம் திகதி நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சென்ற இயந்திரப் படகு பழுதடைந்த காரணத்தால் நடுக்கடலில் தத்தளித்தனர்.

அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அங்குள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது.

தமிழக மீனவர்கள் கடத்தப்படும் இந்த போக்கை உடனடியாக தாங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள சிறைகளில் 20 மீனவர்கள் ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மேலும் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கை வசம் உள்ளது. அந்த படகுகளை திரும்ப தராததால் தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் அவர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

எனவே மழை காலம் தொடங்கும் முன்பு இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அந்த 75 படகுகளையும் மீட்க உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 இலட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வா தாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் தலைவர் புரட்சித்தலைவி அம்மா சொன்னதுபோல அவரது தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே ஏராளமான மீனவர் நலத் திட்டங்களை செய்துள்ளது.

நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினையை தீர்க்க எங்கள் தலைவி இரண்டு விதமான அணுகுமுறைகளை சொல்லி உள்ளார். ஒன்று நிதி திட்டங்கள், இரண்டாவது கச்சத்தீவை மீட்டு அந்த பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்று தர வேண்டும் என்பதாகும்.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்து உள்ளதால் கடும் வருத்தம் அடைந்துள்ளனர்.

எனவே தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்கள் தலைவர் புரட்சித் தலைவி அம்மா ஏற்கனவே விடுத்துள்ள வேண்டு கோளை நிறைவேற்றும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்களையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உரிய அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக ஊடகங்களின் உதவியால் டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி மீட்பு!!
Next post பொலிஸார் மீது தாக்குதல்: தாய், மகள் கைது, மகன் தப்பியோட்டம்!!