By 12 October 2014 0 Comments

இள வயது இயக்குனருடன் காதலா? நடிகை கடுப்பு!!

Untitled-11‘சிறுவயது இயக்குனருடன் காதல் என்பதா? என கோபப்பட்டார் பூஜா காந்தி. ‘கொக்கி, ‘திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் ‘அபிநேத்ரி படத்தை தயாரித்து நடிக்கிறார்.

சதிஷ் பிரதான் இயக்குகிறார். இவருக்கும் பூஜா காந்திக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்கின்றனர். ‘அபிநேத்ரி வெளியானதும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது.

இதுகுறித்து பூஜா காந்தி கூறும்போது,‘நான் ஒரு பெண். பெங்களூரைவிட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது யாரையாவது ஒருவரை துணைக்கு அழைத்து செல்வேன். அவர் (சதிஷ் பிரதான்) என் படத்தை இயக்குவதால் என்னுடன் வரவேண்டிய அவசியம் உள்ளது.

படத்தின் புரமோஷனுக்கு அவர் உடனிருந்தால்தான் சரியாக இருக்கும். இருவரும் ஒன்றாக செல்வதால் ‘டேட்டிங் செல்கிறோம் என்றோ, காதலிக்கிறோம் என்றோ அர்த்தம் கிடையாது. அவர் மிகவும் நல்லவர். நாங்கள் நண்பர்களாக இருப்பதால் காதல் கிசுகிசுவை கிளப்புகிறார்கள்.

இருவரும் நட்பை தவிர காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ பேசியதில்லை. எனக்கு 31 வயது. அவருக்கு 27 வயதுதான் ஆகிறது. எங்களுக்குள் இவ்வளவு வயது வித்தியாசம் இருக்கிறது.

இதுபோன்ற வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது என்றார். இயக்குனர் சதிஷ் பிரதான் கூறும்போது,‘படத்தின் வெற்றிக்காகத்தான் உழைக்கிறேனே தவிர பூஜாவின் மனதை கவர்ந்து அவரை மணந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை என்றார்.



Post a Comment

Protected by WP Anti Spam