By 12 October 2014 0 Comments

அருப்புக்கோட்டையில் திருமணம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்!!

84b3d407-578a-4256-a558-9a09cf5408f8_S_secvpfவிருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூரை சேர்ந்தவர் காயம்பூர். இவரது மகள் மாரீஸ்வரி (வயது24). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

கடந்த 4–ந்தேதி நான் வீட்டில் தனியாக இருந்த போது, திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் பகுதியை சேர்ந்த காதர்மைதீன் மகனான கேபிள் டி.வி. மெக்கானிக் அகமது முஸ்தபா அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

ஆனால் அதன்பிறகு திருமணம் செய்ய மறுத்தார். இது குறித்து புகாரும் செய்யப்பட்டது. இந்த நிலையில் அகமது முஸ்தபாவின் பெற்றோர் காதர் மைதீன்–ஆசியா பேகம் மற்றும் உறவினர் முகமது சாதிக் அலி ஆகியோரை சந்தித்து திருமணம் செய்து வைக்கும்படி கூறினேன்.

அவர்கள் புகாரை வாபஸ் வாங்க ரூ.1 லட்சம் தருகிறோம். இல்லாவிட்டால் கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அகமது முஸ்தபா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam