By 14 October 2014 0 Comments

பேஸ்புக்கில் இருந்த செல்போன் எண்ணை வைத்து பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 2 பேர் கைது!!

d0eda993-1f6c-44cb-86dc-ef8cdcf9043b_S_secvpfகோயம்பேடு மேட்டுக்குப்பம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனிற்கு அடிக்கடி தொடர்பு கொண்ட 2 பேர் அசிங்கமாக பேசியும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் வந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியின் போனில் பதிவான மர்ம நபர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.

அப்போது மீஞ்சூரை சேர்ந்த தீபக், அவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆகியோர் லட்சுமிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி அசிங்கமாக பேசியது தெரிந்தது.

பேஸ் புக்கில் இருந்த லட்சமியின் செல்போன் எண்ணை பார்த்து தொடர்பு கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீபக்கை போலீசார் கைது செய்தனர். சிறுவனை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam