அமெரிக்க எமி விருதுக்கு இலங்கையின் அவலமான ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை!!

Read Time:1 Minute, 48 Second

1884104440NO FIRE ZONE1இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு வலயம் (NO FIRE ZONE) விவரணப்படம் அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரணப்படம் திங்கட்கிழமை 2014ஆம் ஆண்டின் சர்வதேச ´எமி´ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விருதை பெறும் விவரணப்படம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் வெளியிடப்படவுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட்சியங்களுடன் இந்த விவரணப்படம் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது.

10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் ´மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களமும்´ போட்டியிடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தாய்-மகன் மாயம்!!
Next post லண்டன் சம்பவம் கொலை – தற்கொலை என உறுதி!!