உயரும் கடல் நீர் மட்டம்!!

Read Time:1 Minute, 39 Second

1941889827Untitled-1முந்தைய, 6,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த, 150 ஆண்டுகளாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர், கர்ட் லம்பெக் தெரிவித்துள்ளதாவது,

கடந்த, 35,000 ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பல ஆயிரம் ஆண்டுகளாக, அதிகபட்சம், 20 செ.மீ.,க்கு அதிகமாக கடல் நீர் மட்டம் உயரவில்லை.

கடந்த, 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

உலக நாடுகள் பலவற்றில் தொழில்மயம் ஏற்படத் தொடங்கியதை அடுத்து, கடந்த, 150 ஆண்டுகளாக, ஆண்டுக்கு சில மில்லி மீட்டர் கடல் மட்டம் உயரத் தொடங்கியது.

இத்தகைய மாற்றத்தை, 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமா எப்படி இருக்கனும்? கூறுகிறது நீதிமன்றம்
Next post செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்!!