லெக்கின்ஸில் கடவுள்களின் படமா?

Read Time:1 Minute, 27 Second

Untitled-19அமெரிக்காவின் பிரபல இணையத்தள வர்த்தக நிறுவனமொன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, ‘லெக்கின்ஸ்’ ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம்பெற்றுள்ளது.

இது உலகளாவிய ரீதியில் இந்துக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

குறித்த ஆடைகளில் இந்துக் கடவுள்களான விநாயகர், சிவன், ராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயேசு, புத்தர் படங்களும் உள்ளன. இந்த ஆடைகள் இணையத்தின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் 48 முதல் 52 டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இதன் விளம்பரத்தை பார்த்த இந்தியர்கள், கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து, தங்களின் அதிருப்தியை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’ ‘டுவீட்டர்’ ஆகியவற்றில் வெளியிட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெல்கம் ஹோம் அம்மா! மாறியது ஜெ. பேஸ்புக் பக்கம்!!
Next post வீட்டுக்கு தீ வைத்ததால் கணவரை அடித்த கொன்ற மனைவி கைது!!