இவர் இரசிகர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவராம்!!

Read Time:2 Minute, 32 Second

Untitled-113தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சார்மி. அவர் கதாநாயகியாக நடித்து தமிழில் டப்பான சில படங்களில் அவர் ஆடியிருந்த ஆபாச ஆட்டம் பாட்டங்கள் இரசிகர்களை சூடேத்தி விட்டது.

அந்த அளவுக்கு கட்டவிழ்ந்து நின்றார் சார்மி. இருப்பினும் படத்துக்குப்படம் அவரை தோலுரிப்பது அதிகரித்துக்கொண்டே வந்ததால் ஒருகட்டத்தில் ஆந்திர இரசிகர்களுககு அவர் மீதிருந்த ஈர்ப்பானது குறைந்து விட்டது.

அதனால்தான் தற்போது குத்தாட்ட நடிகையாக அவதரித்து நிற்கிறார். கதாநாயகி என்றாலே அவரது ஆட்டம் தாங்க முடியாது, இப்போது நேரடியாகவே அயிட்டம் நடிகையாக களமிறங்கி விட்டதால் சார்மியின் குத்தாட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்குள்ள குத்துப்பாட்டு நடிகைகளெல்லாம் நடுங்கிப்போயிருக்கிறார்களாம்.

இந்த நிலையில்தான், தமிழில் விக்ரம்-சமந்தா நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் குத்தாட்ட என்ட்ரி கொடுக்கிறார் சார்மி. அப்படி அவர் ஆடும் பாடல் காட்சி 9 நிமிடங்கள் செல்கிறதாம்.

குத்துப்பாட்டுக்கு நடனமாட தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது, ஆந்திரா நடிகை சார்மியை நடனமாட வைப்பதேன்? என்று அப்பட இயக்குனர் விஜய் மில்டனை கேட்டால், சார்மி சிறப்பாக நடனமாடக்கூடியவர். சாதாரண நடன அசைவுகளாக இருந்தாலும் அவர் அதை தனது உடல்மொழியால் வெளிப்படுத்தும் விதம் அசத்தலாக இருக்கும்.

அப்படியே அந்த பாடல் முழுக்க இரசிகர்கள் அக்கம் பக்கம் திரும்ப விடாமல் கட்டிப்போட்டு விடும் ஆற்றல் மிக்கவர். அதன்காரணமாகத்தான் சார்மிதான் இந்த பாடலில் ஆட வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!!
Next post மறைந்த பின்னும் சம்பாதிப்பதில் மைக்கல் ஜாக்சன் முதலிடம்!!