சிகரெட் சாம்பலால் இப்படி ஒரு பலன்!!

Read Time:2 Minute, 59 Second

Untitled-115சிகரெட் பிடிப்போர், அதன் சாம்பலை கீழே தட்டி விடுவது வழக்கம். ஆனால், அந்த சிகரெட் சாம்பல், குடிதண்ணீரில் உள்ள விஷத்தன்மை கொண்ட, ஆர்செனிக் என்ற மூலப்பொருளை அகற்றவல்லது என, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளதாவது,

சிலி, சீனா, ஹங்கேரி மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் எல்லாம், நிலத்தடி நீரில், ஆர்செனிக் என்ற நச்சுத்தன்மை உடைய மூலப் பொருள் அதிக அளவில் கலந்துள்ளது.

இந்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரை பருகுவோருக்கு, தோலில் நிறம் மாறுதல், வயிற்று வலி, பக்கவாதம் உட்பட, பலவிதமான உடல் நலக்கோளாறுகள் உருவாகும்.

இந்த ஆர்செனிக் நச்சுப் பொருளை தண்ணீரிலிருந்து அகற்றுவதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அது செலவு அதிகம் நிறைந்தது.

மேலும், வளர்ந்து வரும் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது, நடைமுறைக்கு ஏற்றதல்ல.

அதேநேரத்தில், இயற்கையான கழிவுகளாக கருதப்படும், வாழைப்பழத் தோல் மற்றும் நெல் உமி போன்றவற்றை பயன்படுத்தி, தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக் நச்சுப் பொருளை அகற்றலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனாலும், அது பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. தற்போது, சிகரெட் சாம்பலையும், தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக்கை அகற்ற பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அலுமினியம் ஆக்சைடு கலந்த சிகரெட் சாம்பல், இதற்கு பெரிய அளவில் பயன்படும். அத்துடன் செலவு குறைவானது.

இந்த முறையில், தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக், 96 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதனால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்தில், மக்களுக்கு குடிதண்ணீரை வழங்க இயலும். வழக்கமாக சிகரெட் சாம்பலை கீழே தட்டி விட்டுச் செல்வதே வழக்கமாக உள்ளது. பொது இடங்களில், சிகரெட் பிடிக்க அனுமதிப்பதன் மூலம், சிகரெட் சாம்பலை சேகரித்து, அதை, தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்த பயன்படுத்தலாம். இவ்வாறு, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கறுப்பு பண விவகாரத்தில் வாக்குறுதியை மோடி நிறைவேற்றவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்: திக்விஜய் சிங்!!
Next post 3வது முறையாக போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தகுதியில்லை!!