975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்!!

Read Time:1 Minute, 48 Second

488882769Untitled-1தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 975 அடி உயரத்தில் தொங்கிய, நிஜ பேட்மேனைக் கண்ட, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பலத்த கைதட்டலில் அப்பகுதியே அதிர்ந்தது.

அவுஸ்திரேலியாவில், பிறக்கும் போதே, பல குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர், ஒரு வயதிற்குள் இறந்து போகின்றனர்.

இத்தகைய குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, ´ஹார்ட் கிட்ஸ்´ என்னும் தொண்டு நிறுவனம் அவுஸ்திரேலியாவில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, ´பேட்மேன்´ தோற்றத்தில், ஸ்டன்ட் நடிகர் கிறிஸ் மற்றும் ´கேட்வுமன்´ தோற்றத்தில், ரோவினாவும் தோன்றினர்.

குழந்தைகள் தங்கள் மனங்கவர் கதாபாத்திரங்களில் தோன்றியவர்களைக் கண்டு ஆரவாரித்தனர். அவுஸ்திரேலியாவில் மிகவும் உயரமான, ´யுரேகா டவர்´ மெல்பர்னில் அமைந்துள்ளது. இதில், 975 அடி உயரத்தில், கயிற்றை கட்டிக் கொண்டு தொங்கினர்.

இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகை, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் வழங்கப்படுவதாக, தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேருவின் பிறந்தநாள் கமிட்டி: சோனியா குடும்பம் புறக்கணிப்பு!!
Next post குடித்துவிட்டு கும்மாளம்: ஷர்மிளா, சைப் அலி கானுக்கு நோட்டீஸ்!!