By 20 October 2014 0 Comments

மஹிந்தவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்குமாறு மோடிக்கு சு.சுவாமி அவசர கடிதம்!!

44951070611-mahinda-subramanianஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருது வழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியம் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த காரணத்திற்காக இந்த விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட வேண்டுமென சு.சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கும் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக சு.சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam