ஜனாதிபதி – ஹெல உறுமய இடையே இன்று முக்கிய சந்திப்பு!!

Read Time:1 Minute, 45 Second

1546902603thஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களுக்கும இடையில் இன்று (21) மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு, ஜாதிக ஹெல உறுமய கொண்டுவந்துள்ள தீர்மானங்கள் தொடர்பில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானங்கள் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதால், கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும், தமது தீர்மானங்கள் குறித்து கலந்துரையாட தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தீர்மானங்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் 11 ஆவது பொது சம்ளேனத்தில் வெளியிடப்பட்டன.

தமது தீர்மானங்களுக்கு ஜனாதிபதி இணங்காவிடின், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக இதன்போது உதய கம்மன்பில கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுவுக்கு நாளை மட்டும் முற்றுப்புள்ளி!!
Next post வீதி திருத்தம் காரணமாக வாகனத்தை நிறுத்திய ஊழியரை தாக்குவது சரியா?