காதலியைத் தொடாதே என ஒபாமாவை மிரட்டிய வாலிபர்!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய கூடத்தில் கவர்னர் தேர்வுகான ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ஒட்டளித்தார். அப்போது அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண் ஒட்டளித்துக் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் அவர் இருந்ததை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டார்.
இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார். சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியது.
தனது காதலரின் நடத்தைக்காக கூப்பர் மன்னிப்பு கோரினார். அவர் ஸ்மார்ட்டாக சொல்லபோகிறார் என நினைத்தேன் ஆனால் அவர் இவ்வாறு கூறுவார் என்று தெரியாது என கூறினார்.
பின்னர் ஜான்ஸ் தனது தவறை உணர்ந்து கொண்டார். மக்கள் எல்லோரும் அமைதியாக இருந்தனர் அவர்களை சிரிக்க வைப்பதற்காக நகைச்சுவைக்காக கூறியதாக தன்னுடைய கருத்தை நியாயபடுத்தினார்.
இந்நிகழ்வு அங்கே சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating