பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் செல்லும் பென்சில் படக்குழுவினர்!!

Read Time:1 Minute, 44 Second

9f69ef40-4f0e-400b-b366-034c8f39bcf8_S_secvpfஇசையமப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். மணி நாகராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தை கல்சன் மூவிஸ் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இடம் பெறும் 2 பாடலுக்காக 25 பேர் கொண்ட குழு பாடல் காட்சிகளை படம்பிடிக்க நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பயணிக்கின்றனர்.

பாடலாசிரியர் தாமரை வரிகளில் ‘கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே…’ மற்றும் ‘யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்…’ என்ற இரண்டு பாடல்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் அசைவுகளுக்கு நடனமாடவுள்ளனர்.

இதுவரை யாரும் பார்த்திராத ஜப்பானின் இயற்கை அழகையும், நகரத்தின் ஒளிவிளக்குகளையும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காண்பிக்க இயக்குனர் மணி நாகராஜ் திட்டமிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!!
Next post மன்னிக்கவும், நான் சாக விரும்புகிறேன்” பொறியியல் மாணவர் தற்கொலை: கேலிக்கையாக ‘லைக்’ போட்ட 28 பேர்!!