மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்க மீசை வைத்த சரியான ஆண் வருவாரா..?

Read Time:2 Minute, 57 Second

10646062291168378270gnanasara-himi2ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அரசாங்கம் மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அப்படி கணக்கிலெடுக்காவிட்டால் அரசாங்கம் அவதானிப்பற்று போகும் என்றும் கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

சிங்கள-பௌத்தர்கள் தற்போது பிரச்சினையை எதிர்நோக்கி இருப்பதால் அருகில் பார்க்காது தூரத்தை நோக்கி பார்க்குமாறு அரசாங்கத்திற்கு தேரர் அறிவுரை வழங்கியுள்ளார்.

´நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்´ என்று பதாகை பிடித்துச் சென்றாலும் தம்புள்ளை மரக்கறிகள் இன்னும் குப்பையாகி வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தியானது அமெரிக்காவில் கடன் பெற்று அவுஸ்திரேலியாவில் அப்பில் சாப்பிடுவதற்கு சமனானது என்றும் வீதிகள் அமைப்பது, கட்டிடங்கள் கட்டுவது வரலாற்றில் இடம்பெற்றதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் ´ஒழிந்துபிடி´ விளையாட்டு இடம்பெறுவதாகவும் பொது வேட்பாளரை இன்னும் காணமுடியவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என்பது தெரிந்த விடயம் என்பதால் அவரது வெள்ளை மற்றும் கறுப்பு பகுதிகளை தாம் அறிவதாகவும் அவருக்கு சவால் விடுக்கக்கூடி மீசை வைத்த சரியான ஆண் ஒருவரை காணமுடியவில்லை இன்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

பொது வேட்பாளர் வருவார் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும் ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பார்க்கும் போது சிறந்த பொது வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ இருப்பதாகவும் அவரைச் சுற்றி பல தரப்பினர் ஒன்று சேர்ந்திருப்பதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களை தாக்கியோர் பிணையில் விடுதலை!!
Next post உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது!!