உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது!!

Read Time:2 Minute, 37 Second

3bd4778d-b65f-4638-a897-f8ba3af1f421_S_secvpfஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விரைவில் உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானத்தை சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்கவிருப்பதாகவும், இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் வெளியே உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வகையான விமானங்களில் ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள திரைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியே உள்ள காட்சிகளை பார்க்கலாம். பயணிகளுக்கு வெளிப்புற காட்சிகள் தெரியவேண்டாமென்றால் அதற்கேற்பவும் மற்றியமைத்துகொள்ளலாம்.

இது குறித்து செயல்முறை கண்டுபிடிப்பு மையம் தெரிவித்துள்ள தகவலில், ’விமானத்திலிருந்து சிறிய ஜன்னல் வழியாக உலகை பார்த்த காலம் போய்விட்டது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் விமானங்கள் உலகின் தெள்ள தெளிவான பரந்து விரிந்த காட்சியை பயணிகளுக்கு அளிக்கும். நாங்கள் அதற்காக அதிக வளையும் தன்மைக்கொண்ட, உயர் வரையறை டிஸ்பிளே தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறோம்.

விமானத்தின் உட்புற சுவர்களில் இந்த டிஸ்பிலே பொருத்தப்பட்டு அதன் மூலம் கேமராக்களில் இருந்து வீடியோக்களை கூட ஒளிப்பரப்ப முடியும்.

கரிம ஒளி உமிழும் இருமுனைய (Organic Light Emitting Diode) தொழில்நுட்பம் மூலம் இவை தயாரிக்கப்படுவதால் விமானத்தின் எடை குறையும், எடை குறைந்தால் விமானத்தை இயக்க தேவைப்படும் எரிவாயுவின் அளவும் குறையும். எரிவாயு பயன்பாடு குறைந்தால் அதிலிருந்து வெளியேறும் co2-வின் அளவும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்க மீசை வைத்த சரியான ஆண் வருவாரா..?
Next post ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்!!