திருப்பதி கோவில் அருகே வேற்றுமத பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு 2 மாதம் சிறை!!

Read Time:2 Minute, 6 Second

aa0b7923-b15b-4d80-9ea6-b67d9aaeb00e_S_secvpfதமிழ்நாடு மாநிலம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மார்த்தா மரியா. இவர், கடந்த செப்டம்பர் மாதம் திருமலைக்கு வந்துள்ளார். திருமலையில் உள்ள இலவச அன்னதான கூடம் அருகில் நின்று கொண்டு, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த திருமலை–திருப்பதி தேவஸ்தான பெண் ஊழியர்களிடம் வேற்றுமத பிரசார துண்டு பிரசுரங்களை வழங்கி, மதம் மாறும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் திருப்பதி–திருமலையில் வேற்றுமத பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதுபற்றி பெண் துப்புரவு ஊழியர்கள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வேற்றுமத பிரசாரத்தில் ஈடுபட்ட மார்த்தா மரியாவை கையும் களவுமாக பிடித்து திருமலை–1 டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், வேற்றுமத பிரசாரத்தில் ஈடுபட்டதாக மார்த்தா மரியா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பதி கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி நீலாவெங்கடசேஷாத்திரி, மார்த்தா மரியா செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: காங். பிரமுகர் மகன் கைது!!
Next post ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்!!