16அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள், வீடியோ)
7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான ‘கோர்ஸெட்’ என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணி அமெரிக்க மொடல் அழகியொருவர் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கெல்லி லீ டிகே (27வயது) என்ற பெண், சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளின் கதாப்பாத்திரங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் அளவில் சிறிய இடைப் பகுதியால் கவரப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது இடையை சிறிதாக்கும் செயற்கிரமத்தை ஆரம்பித்தார்.
தனது இடை சிறிதானதையடுத்து தன்னால் எதுவித சங்கடமுமின்றி அனைவர் முன்னிலையிலும் தைரியமாக வலம் வர முடிவதாக கூறிய அவர் தனது உடலை இறுக்கும் ஆடை உடல் நலத்துக்கு அபாயம் விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்த ஆடையை அணிந்து உடற்பயிற்சி செய்தும் பாரமான பொருட்களைத் தூக்குவதும் அபாயகரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating