முன்னாள் காதலியை அடித்து சர்ச்சையில் சிக்கிய மரடோனா!!

Read Time:1 Minute, 58 Second

150761534Untitled-1அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டிகோ மரடோனா. அபாரமான ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான இரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று உள்ளார்.

1986–ம் ஆண்டு இவரது தலைமையில் தான் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் மரடோனாவுக்கு வாடிக்கையான ஒன்றாகும். தற்போது முன்னாள் காதலியை அடித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மரடோனாவின் முன்னாள் காதலி ரோசியோ ஆலிவா. கடந்த மார்ச் மாதம் துபாயில் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காதலி ஆலிவர் திருடி சென்றுவிட்டதாக மரடோனா குற்றச்சாட்டி இருந்தார். அதோடு பொலிசிலும் புகார் கொடுத்தார்.

இதற்கிடையே ஆலிவரை மரடோனா அடித்து உதைத்ததாக புகார் எழுந்து உள்ளது. முன்னாள் காதலியை அவர் கையால் அடிப்பது போன்ற வீடியோ அர்ஜென்டினா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆனால் இதை மரடோனா மறுத்துள்ளார். முன்னாள் காதலியை அடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே காதலி மீது கொடுத்திருந்த திருட்டு புகாரை மரடோனா திரும்ப பெற்றுள்ளார்.

இது தொடர்பாக ஆலிவா கூறும்போது, நான் மரடோனாவிடம் பேசினேன். அதற்கு பிறகு அவர் என் மீதான புகாரை மீளப் பெற்றார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிஸ் ஆப் லவ் – காதலர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு!!
Next post பிரபல நடிகை காதலருடன் கைது!!