ஓரினச் சேர்க்கை கடவுள் தந்த பரிசு!!

Read Time:1 Minute, 52 Second

Untitled-136ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சி.இ.ஓ) டிம் குக், ‘நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் மற்றும் கனணி மென்பொருள் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் டிம் குக்.

இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில், “நான் ஓரினச் சேர்க்கையாளன் என்பதில் பெருமைப்படுகிறேன். இதை கடவுள் எனக்கு கொடுத்த மிகச் சிறந்தப் பரிசாக கருதுகிறேன்.

நான் ஓரினச்சேர்க்கையாளர் என்பது, என்னுடன் பணியாற்றும் பலருக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்னிடம் எந்த விதத்திலும் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை.

ஓரினச் சேர்க்கையாளர் பலர் தங்கள் அடையாளத்தை தெரியப்படுத்துவதில் சிக்கலை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவன தலைவர் ஆர்ட் லெவின்சன், ‘டிம் குக் தைரியசாலி’ என கூறியுள்ளார்.

டிம் குக்கின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைக்கு செக்ஸ் தொல்லை!!
Next post ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!