சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 4221 பேர் பாதிப்பு!!

Read Time:2 Minute, 13 Second

49852267Untitled-1சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 1215 குடும்பங்களைச் சேர்ந்த 4221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களுக்காக மஹவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெதகோட மற்றும் மோதரவெல்ல ஆகிய பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டவர்களே அதிகம் எனவும், அங்கு 750 குடும்பங்களைச் சேர்ந்த 2300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தங்கொட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும், நாத்தண்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 40 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாதம்பே பகுதியில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேரும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேரும் மஹவெவ பகுதியில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 967 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகள் யாவும் பிரசேத செயலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்கள் தூக்குமேடை செல்ல மோடியே காரணம் – வைகோ ஆவேசம்!!
Next post பொலிஸாருக்கு புதிய சீருடை!!