(PHOTOS, VIDEO) துண்டு துண்டாக வெட்டி விபச்சார பெண் கொடூர கொலை!!
இந்தோனேஷியாவை சேர்ந்த விபச்சார பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த வாரம் இந்தோனேஷியாவை சேர்ந்த சுமர்தி என்ற விபச்சார பெண் ஹொங்காங் நாட்டில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சடலமானது பிரித்தானியாவை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்த பெட்டி ஒன்றில் கிடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ருரிக் என்ற அந்த வங்கி ஊழியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களின் மகளை இழந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சுமர்தாவின் பெற்றோர், தங்களின் மகளை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் இந்த நபர் இதற்கு முன் பல கொலைகளை செய்த சைகோ கொலையாளியாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.