திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 30 Second

92b5742c-c22d-4c61-befa-b3bd7d7cfb15_S_secvpfதிருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகளுக்கு 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

அதே போன்று தண்டராம்பட்டு ஒன்றியம் வாழவச்சனூர் கிராமத்தை சேர்ந்த போஜன் என்பவருடைய மகள், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய மகள் ஆகியோருக்கும் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடக்க இருந்தது.

இதுபற்றி கலெக்டர் ஞானசேகரனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் சமூக நல அலுவலர் உமையாள் 3 கிராமங்களுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது 3 பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடக்க இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 பெண்களின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்.

அதன்பின் 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்யக் கூடாது என்று பெண்களின் பெற்றோரிடம் விளக்கி அவர்களிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!
Next post வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!