டேராடூனுக்கு துணைவருடன் சுற்றுலா வந்த டெல்லி பெண்ணை கற்பழித்து இருவரையும் கொன்ற டாக்சி டிரைவர் கைது!!

Read Time:3 Minute, 43 Second

df3ef50a-bda0-4176-acb5-0f17c8a72edf_S_secvpfடெல்லியைச் சேர்ந்த மவுமிதா தாஸ்(27) குர்கானில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட இவர், கொல்கத்தாவைச் சேர்ந்த தனது ஆண் நண்பரான அவிஜித் பால் (24) என்பவருடன் கடந்த (அக்டோபர்) மாதம் இங்கு வந்தார்.

டேராடூனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சுற்றுலா சென்ற தனது மகள் இன்னும் வீடு திரும்பாததைக் கண்டு கலக்கமடைந்த மவுமிதா தாஸின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று கடந்த 29-ம் தேதி டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திவந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள புரோலா பகுதியில் உள்ள மலைமுகட்டின் கீழே அவிஜித் பாலின் பிரேதத்தை அம்மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநில போலீசார் நடத்திய ‘விறுவிறு’ விசாரணையில் சில மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கின.

மவுமிதா தாஸ் மற்றும் அவிஜித் பால் டேராடூனுக்கு வந்து சேர்ந்த இரண்டாவது நாளான 23-10-2014 அன்று ‘டைகர் ஃபால்ஸ்’ என்ற சுற்றுலாத்தலத்தை பார்த்து ரசித்துள்ளனர். அங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சக்ரதா பகுதிக்குச் செல்ல ஒரு டாக்சியை பிடித்தனர்.

சக்ரதாவுக்கு செல்லும் வழியில் ஒரு மலைப்பாங்கான சாலையோரம் டாக்சியை நிறுத்திய டிரைவர் ராஜு என்பவன், அவிஜித் பாலின் கழுத்தை நெரித்துக் கொன்று மலை முகட்டில் இருந்து உருட்டி விட்டான். பின்னர், செல்போன் மூலம் தனது நண்பர்கள் 3 பேரை அந்த இடத்துக்கு வரவழைத்தான்.

நால்வருமாக சேர்ந்து மவுமிதா தாஸை கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்காமண்டல் பகுதியில் ஓடும் யமுனை ஆற்றில் மவுமிதா தாஸை தூக்கிப்போட்ட அந்த கும்பல் ஒன்றும் அறியாததுபோல் தனது வழக்கமான பணிகளை தொடரத் தொடங்கியது.

அவிஜித் பாலின் பிணம் கிடைத்தவுடன் நடத்தப்பட்ட புலனாய்வு விசாரணையில், மேற்கண்ட தகவல்களை திரட்டிய போலீசார், டாக்சி டிரைவர் ராஜு மற்றும் இந்த கொலை மற்றும் கற்பழிப்பில் அவனுக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளான பாபுலு, குட்டு, குந்தன் ஆகியோரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

யமுனை ஆற்றில் மவுமிதா தாசின் உடலை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 53 வயது – 140 பேருடன் காதல் லீலை..!!
Next post நாடி துடிப்பு இன்றி 45 நிமிடம் உயிர் வாழ்ந்த குழந்தை!!