முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்!!

Read Time:2 Minute, 45 Second

unnamed (81)தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் கடந்த 12.11.2014 புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுபவர்களினால் அவா் வசித்துவரும் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதனை முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா் இலங்கை அரசாங்கத்தினால் புனா்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடனும், தன் குடும்பத்துடனும் ஒன்றினைந்து வாழ்ந்து வந்தநிலைமையில் இச்சம்பவம் ஆனது தமிழ்பேசும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

2009ம் ஆண்டு 18ம் திகதி யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்று மாா் தட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்கள் இனிமேல் நாட்டில் பாதுகாப்பிற்காக மட்டுமே துப்பாக்கி சத்தங்கள் கேட்கும் அதனை விட அழிவிற்காக துப்பாக்கி சத்தங்கள் கேட்க மாட்டாது என்று கூறியதுடன் மேலும் நாட்டில் எந்தப்பகுதியிலாவது துப்பாக்கி சத்தம் கேட்டால் அதற்கு பொறுப்பு இந்த அரசாங்கம் என்றும் பெருமிதமாக பேசிக்கொண்டாா்.

இந் நிலையில் மேற்படி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட வகையிலே நடைபெற்றதாக நாம் என்னுகின்றோம். எனவே குற்றம்செய்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தன்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்ந அரசாங்கத்தினுடைய கடமையும், பொறுப்பும் ஆகும்.

இதனை செய்யதவறும் பட்சத்தில் தமிழ் பேசுகின்ற மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகவும்,நிம்மதியுடனும் வாழ முடியாது என்பதையே நாங்கள் கருதுகின்றோம். எனவே சம்பவத்துடன் தொடா்புடையவா்களை கைது செய்தவதற்குாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
எஸ்.விஜயகாந்
செயலாளர் நாயகம்,
முற்போக்கு தமிழ் தேசிய கட்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஷ்புவை அறிமுகப்படுத்திய காலமானார்!!
Next post சிறையில் இருந்தவருக்கு 51 தூக்க மாத்திரை கிடைத்தது எப்படி?