இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு பாதிப்பில்லை!!

Read Time:1 Minute, 36 Second

841224999Untitled-1இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.சரத் லால் குமாரவிடம் அத தெரண இது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தோனோஷியாவின் கிழக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தப் பகுதியை சூழ 300 கிலோமீற்றர் தூரத்திற்கு அசூர அலைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமித் தாக்கம் ஏற்பட்டது.

இதனால் 250,000 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 ஆண்டுக்கு முன் இறந்த ராணுவ வீரர் – இப்போது சிறுவன் உடலில்!!
Next post மாளிகாதென்ன பகுதியில் மண்சரிவு அபாயம்!!