கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!!

Read Time:3 Minute, 40 Second

2d8448ff-7942-4df1-a165-ea8296c9d47d_S_secvpfகேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது.

இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி. படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த (அக்டோபர்) மாதம் 30-ம் தேதி அன்பாக பேசிய இரு மாணவர்கள், அந்தக் குழந்தையை ஆஸ்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

தனிமையை பயன்படுத்தி அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மாணவர்கள், சிறுமி வலியால் துடித்து, கூச்சலிடவே அந்த இடத்தை விட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர், பிறப்புறுப்பில் தாங்க முடியாத வலியால் துடித்த அந்தக் குழந்தை, பள்ளி ஆஸ்டலில் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதாள்.

இதனையடுத்து, வாலையம் பகுதி போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையின் முடிவில் அவள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது, உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பால் மணம் மாறாத குழந்தையிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொண்ட அந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர் அணியினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியின் முன் கடந்த 11-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தனியார் பஸ்சில் கிளீனராக வேலை செய்யும் ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதியினர், உண்மை குற்றவாளியை மறைத்து, அப்பாவிகளை இந்த வழக்கில் சிக்கவைக்கும் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் வேறு வழியின்றி, உரிய விசாரணை நடத்திய அந்தப் பள்ளி நிர்வாகம் உண்மை குற்றவாளிகளை போலீசாருக்கு அடையாளம் காட்டியது.

நான்கரை வயது குழந்தையிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொண்ட சுமார் 18 வயது மதிக்கத்தக்க இருவரை இன்று கைது செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரும் அந்தப் பள்ளியில் மதம் சார்ந்த கல்வியை கற்பதற்காக அங்கேயே தங்கி வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்களின் உறவினர்கள் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த முடிவு!!
Next post விஜயுடன் ஆடிய ஶ்ரீதேவி!!