(PHOTOS) லிங்கா இசை வௌியீடு – ரஜினி இரசிகர்கள் ரகளை!!
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். மேலும், ரஜினியின் இரசிகர்களும் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் இரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபடியால் இந்த நிகழ்ச்சியை மற்றொரு தியேட்டரிலும் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தது படக்குழு. அதனால், சத்யம் திரையங்க வளாகத்தில் இருக்கும் மற்றொரு திரையரங்கமான சாந்தம் திரையரங்கிலும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தனர்.
இங்குதான் பத்திரிகையாளர்களுக்கும், ரஜினி இரசிகர்கள் சிலருக்கும் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கி பல மணி நேரங்கள் ஆகியும், சாந்தம் திரையரங்கில் அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதிகூட திரையிடப்படவில்லை. இதனால் இரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
பொறுமை இழந்த சில இரசிகர்கள் படக்குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திரையரங்குக்குள் ரகளையில் ஈடுபட்டனர். ஒருசில இரசிகர்கள் தியேட்டரின் கதவை திறந்து வெளியே செல்ல முற்பட்டனர். அவர்களை பொலிசாரின் உதவியோடு திரையரங்கு ஊழியர்கள் கட்டுப்படுத்தினர். இருந்தும் தொடர்ந்து இரசிகர்கள் கூச்சல் போட்டு வருகின்றனர்.
சத்யம் திரையரங்கில் இதுமாதிரி நடப்பது ஒருமுறை இரண்டு முறையல்ல. பலமுறை இதுபோல்தான் நடைபெற்று வருகிறது.
Average Rating