போலி ஆபாசப் படங்கள் – நடிகை புகார்!!
இணைய தளத்தில் கவர்ச்சி நடிகை அக்ஷராவின் பிகினி ஸ்டில்ஸ் போலியாக வெயிடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் பொலிசில் அவர் புகார் செய்தார்.
அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி, சில காட்சிகளில் நடித்தவர் அக்ஷரா. அவர் கூறியதாவது:நான் போஸ் கொடுத்ததுபோல் போலியான ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளன. அவை, நான் பிகினியில் இருப்பதுபோன்ற ஆபாச ஸ்டில்கள்.
அதை பார்ப்பதற்கு தர்மசங்கடமாக இருக்கிறது. மேலும் என் பெயரில் போலியான பேஸ்புக் பக்கங்களும் இணைய தளத்தில் உள்ளன. நான் இணைய தள கணக்கு எதிலும் இணைந்திருக்கவில்லை. இவை எல்லாமே போலியானவை. மேலும் நான் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இருப்பதாக மெசேஜும் போடப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே நான் சென்னையில் இல்லை. இவையெல்லாம் எனக்கு எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்திருக்கிறேன். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அடுத்து ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Average Rating