நடிகர் விஜயின் விவாகரத்து முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு!!

Read Time:2 Minute, 6 Second

courtதுனியா என்ற கன்னட படத்தில் நடித்ததால் கன்னட திரையுலகில் துனியா விஜய்என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்பவர் கடந்தவருடம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும்மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அவருடைய இந்த முடிவை கன்னடதிரையுலகினர் வரவேற்றுள்ளனர்.

துனியா விஜய்க்கும் நாகரத்னா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர்திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த வருடம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகதுனியா விஜய் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவடையும் நிலையில்இருந்தபோது நேற்று துனியா விஜய் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்இருதரப்பிலும் உள்ள பெரியவர்களின் மத்தியஸ்தம் காரணமாக மனைவியுடன்சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னுடைய விவாகரத்து வழக்கை வாபஸ்பெற்றுக்கொள்வதாகவும் அவர் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்தவழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கன்னட திரையுலகினர் துனியாவிஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். துனியா விஜய்யின் இந்த முடிவுக்குதமிழ்த்திரையுலகில் இளையதளபதி விஜய் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!!
Next post வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயர் ஆபாச படத்தை பரப்பிய 4 கேரள வாலிபர்கள் கைது!!