மைத்திரியின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்!

Read Time:1 Minute, 19 Second

2011261330Untitled-1பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தப் பதவிகளை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து அவர் வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பதவி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகள் என்பனவற்றில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியால் சுட்டு வியாபாரி தற்கொலை!!
Next post சிவகிரி அருகே பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சென்ற தாய்-மகள் மாயம்!!