நடிகையின் செல்பியால் ஏற்பட்ட பிரச்சினை!!
அமெரிக்காவில் ஹாலிவுட்டில் வாய்ப்புக் கிடைக்காமல் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை அலீசா மிலானா, சமீபத்தில் கொடுத்த செல்பி போஸ் ஒன்றினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கொடுத்த இந்த போஸுக்கு கடும் கண்டனங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளதால் அவர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
கிம் கர்தஷியன் நிர்வாணமாக போஸ் கொடுப்பதையே இரசிக்கும் அமெரிக்கர்கள் என்னுடைய இந்த போஸை மட்டும் ஏன் குறை கூறுகின்றனர் என்றே தெரியவில்லை.
காசு வாங்கிக்கொண்டு போஸ் கொடுத்த கிம்தர்ஷனை இரசிக்கும் மக்கள் ஒரு விழிப்புணர்ச்சிக்காக நான் கொடுத்த போஸை விமர்சிப்பது முட்டாள்தனம் என கடுமையாக சாடியுள்ளார்.
அப்படி என்ன விழிப்புணர்ச்சி போஸ் கொடுத்தார் என கேட்பவருக்கு பதில் இதோ. அவர் கொடுத்தது குழந்தைக்கு பால் கொடுப்பது போல எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம்.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போஸ் கொடுத்ததாக அலீசா கூறினாலும் இந்த புகைப்படத்தில் ஆபாசமே மிஞ்சியிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
Average Rating