இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!!

Read Time:1 Minute, 55 Second

03a8bb62-2779-4f28-a94f-3eb943f2caf6_S_secvpfபுற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘‘கேன்சர் கேர்’’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:–

இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர் 2 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் ஆவர். 30 சதவீத புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் புற்று நோயை தடுக்கலாம். மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து உடற்பயிற்சியின் முக்கியத்துவம், உடல் எடையை எவ்வாறு பராமரிப்பது, ஆரோக்கிய உணவு பழக்க வழக்கம், புகை பழக்கம், புகையிலை மெல்லுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

புற்றுநோய் சிகிச்சை என்பது சாதாரண ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள், நல்ல மனம் படைத்தவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சென்னை கேன்சர் கேர் மருத்துவமனையின் தலைவர் எஸ்.அலெக்ஸ் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிளோரா பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொனராகலை – கொழும்பு தனியார் பஸ்கள் சேவையில் இல்லை!!
Next post ஊசி போட்டதில் மாணவன் சாவு: போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்!!