ஊசி போட்டதில் மாணவன் சாவு: போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்!!

Read Time:1 Minute, 46 Second

29fb005f-f252-4460-98a7-f5be8b55af2a_S_secvpfதண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் மனோ (வயது 16) பிளஸ்–2 மாணவர். கடந்த 1998–ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவரை பெற்றோர் அதேபகுதி இளைய முதலி தெருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது டாக்டராக இருந்த மனோகரன் அவருக்கு ஊசி போட்டார். சிறிது நேரத்தில் மாணவன் மனோ பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தண்டையார் பேட்டை போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில் பிளஸ்–2 படித்து இருந்த மனோகரன், வேறொரு ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்த அனுபவத்தில் தனியாக ஆஸ்பத்திரி திறந்து டாக்டராக சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து போலி டாக்டர் மனோகரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை, ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் 15–ல் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் போலி டாக்டராக இருந்து சிகிச்சை அளித்த மனோகரனுக்கு 6 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முதல் போலி டாக்டர் மனோகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!!
Next post ஆண்மையை அதிகரிக்க பாம்பு னை் குடிக்கும் ஜனாதிபதி!!