மதுரையில் இளம்பெண் உள்பட 2 பெண்கள் மாயம்!!
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுருளி. இவரது மனைவி வேலுத்தாய் (எ) கருப்பாயி (வயது42). இவர் சித்தாள் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவரது மகன் மணிகண்டன் எல்லீஸ்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மதுரை கோச்சடை டோக்நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது22). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அன்று மதியம் தனது 1½ வயது மகனை விட்டு விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.
இது குறித்து முருகேஸ்வரியின் தந்தை பழனிவேல் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.