பஸ் பள்ளத்தில் வீழ்ந்து சிறுவன் பலி 44 பேர் காயம்!!
புளத்கொஹூபிட்டி – திக்ஹேன, தம்பபெல்கொட பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்து மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.
வீதியை விட்டு விலகிய பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் அறுவர் கேகாலை வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் உதுகொட கிராமிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.