பேய் படங்கள் பக்கம் திசை திரும்பும் பிரபுதேவா..!!

Read Time:1 Minute, 35 Second

pirabuபிரபுதேவா இந்தியில் ‘பிசி’யான டைரக்டராக இருக்கிறார். அஜய்தேவ்கான்– சோனாக்சி சின்காவை வைத்து அக்சன் ஜக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. தமிழிலும் படங்கள் இயக்க உள்ளார். தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் பேய் படங்கள் இயக்க பிரபுதேவா முடிவு செய்துள்ளார். தமிழ் பட உலகில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் வந்த பேய் படங்கள் வசூல் குவித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளன. எனவே பிரபுதேவாவும் பேய் படம் எடுக்க தயாராகி வருகிறார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறும்போது, ‘‘நான் ஆக்ஷன் படங்களையும் காமெடி படங்களையும் எடுத்து இருக்கிறேன். அடுத்து ‘திகில்’ நிறைந்த பேய் படம் எடுக்க யோசித்து வருகிறேன். அதற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் அந்த படத்தை எடுப்பேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி!!
Next post இந்தியாவில் புதிய எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் சரிந்தது!!