பெரம்பலூர் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவி கடத்தல்?: போலீசில் தந்தை புகார்!!
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பாண்டக பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கிருத்திகா (வயது 28). இவர் பெரம்பலூரில் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். கடந்த 29–ந் தேதி நோட்டு வாங்குவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்ற கிருத்திகா மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிய தங்கவேலு இது பற்றி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் விவேக் வழக்கு பதிவு செய்து கிருத்திகாவை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது அவரே எங்கும் சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.