பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: கள்ளக்காதல் விவகாரமா? – போலீஸ் விசாரணை!!
கேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ளது தட்சநாட்டுக்கரை. இங்குள்ள தாரைக்கோட்டை சேர்ந்த கருத்தக்கனின் மகள் சுசீலா (வயது34). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்தார்.
இவருக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 8 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தினேஷ் (24). சுசீலாவும், தினேசும் கடந்த திங்கட்கிழமை முதல் மாயமானார்கள். அவர்களது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.
இந்நிலையில் தாரைக்கோட்டில் உள்ள ஆளில்லாத வீட்டில் சுசீலாவும், தினேசும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மன்னார்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 2 பேரின் உடலை மீட்டு மன்னார்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.