2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்: காதலி ஆவேசம்!!
பாலசிங் ஏமாற்றியதால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சுனிதா கூறியதாவது:–
பாறசாலை பதிவு அலுவலகத்தில் என்னை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி இருப்பதை தெரிவிக்காமல் என்னுடன் குடும்பம் நடத்தினார். அவர் மூலம் நான் தொடங்கிய தொழிலில் பல லட்சம் கடன் ஏற்பட்டது. அவரால் ஏற்பட்ட கடனை அவர் தான் தீர்க்க வேண்டும்.
அதை விட அவருடன் குடும்பம் நடத்திய நாட்களில் இருமுறை நான் கருத்தரித்தேன். அதை அவர் கருக்கலைப்பு செய்ய கூறியதால் கருக்கலைப்பு செய்து கொண்டேன். இப்படி என்னை ஏமாற்றி இப்போது முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தப்போவதாக கூறிச்சென்ற பாலசிங் இனி எனக்கு வேண்டாம்.
ஆனால் அவர் என்னை ஏமாற்றியதற்கும், இதுபோல பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் பாடம் கற்பிக்கவும் இந்த பிரச்சினையை சும்மா விடப்போவதில்லை. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை கொண்டு சட்டப்போராட்டம் நடத்தப்போகிறேன். வக்கீல்களுடன் கலந்தாலோசித்து விரைவில் பாலசிங் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.