பணம் கொடுத்து எவரையும் தக்கவைத்துக் கொள்ளும் தேவை இல்லை – அரசாங்கம்!!

Read Time:2 Minute, 12 Second

19697027151830327184anura yapa new2ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட் போடப்பட்டுள்ளது கட்சி ஆதரவாளர்களால் என்றும் அவை அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்தி போடப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அனுமதி இன்றி கட்அவுட் போடப்பட்டுள்ளதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்தபின் அவை அகற்றப்படும் என்றும் கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கத்தில் ஜனநாயகம் இல்லை என மைத்திரிபால சிறிசேன கூறுவதாகவும் அப்படியாயின் அவரது மனதில் ஜனநாயகம் இருக்கிறதா என்று அநுர பிரியதர்ஷன யாப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்காக தாம் அஞ்சவில்லை என்றும் எதிர்வரும் 8ம் திகதியின் பின்னர் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன் திஸாநாயக்கவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறவிடாதிருக்க 100 மில்லியன் பணம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யாப்பா, ´அவ்வளவு ஒபர் கொடுக்கும் அளவிற்கு அவர் பெரிய ஆளா´ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

யாரையும் பணம் கொடுத்த தக்க வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை என்றும் செல்பவர்கள் செல்ல முடியும் என்றும் வழங்குவதற்கு தங்களிடம் பணம் இல்லை என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகளுக்கு தற்காலிக விசா: ஆஸி. செனட் சபையின் சட்டமூலம் நிறைவேற்றம்!!
Next post இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!