வாள் சண்டை கற்கும் ஹன்சிகா – ஆண்களே ஜாக்கிரதை!!

Read Time:2 Minute, 2 Second

hansikaவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் ஹன்சிகா இளவரசி வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக வாள் சண்டை பயிற்சி கற்றுக் கொள்கிறாராம். ஹாங்காங்கில் இருந்து வாள் சண்டையில் திறமை வாய்ந்தவர்களை கொண்டு வந்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் உடன் இணைந்து நடிக்கும் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்திற்காக வாள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இப்படத்தில் இளவரசி வேடத்தில் நடிப்பது எனக்கு உற்சாகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்திலும், கன்னட நடிகர் சுதீப் போர்வீரராகவும் நடிக்கின்றனர். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிடி செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி, விஜய், ஷங்கரின் சாதனைகளை முறியடித்த அஜீத்!!
Next post நெருக்கமாக நடிப்பது வெறும் நடிப்புதான்!!