தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை!!

Read Time:5 Minute, 8 Second

1489077025indian-gold2015-16-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இப்போது 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

“தற்சமயம் தங்கம் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும், பட்ஜெட்டின் ஒரு முக்கிய அம்சமாக அது இருக்கும். இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை” என நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளதால் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகமும் இறக்குமதி வரியை குறைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரியை மாற்றி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதாக பாரத ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் அண்மையில் தெரிவித்தார்.

80:20 விதிமுறை பற்றி கூறுகையில், அந்த விதி நீக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் தங்கம் சப்ளை அதிகரிப்பதுடன் தங்க கடத்தலும் குறைய வழிவகுக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதால் இன்னும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டிய தேவையில்லை என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உலக அளவில் தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த தங்க தேவைப்பாடும் இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. தங்கம் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது.

மொத்த அன்னியச் செலாவணி செலவினத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை எனப்படுகிறது. கடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது.

இதனால், தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இறக்குமதி வரி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இப்போது அது 10 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதிக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது. இதன் ஓர் அங்கமாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், 80 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி குறைந்தது. இதனால் சென்ற நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் 80:20 விதிமுறையை மத்திய அரசு நீக்கியது. தங்கம் இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக இந்த விதிமுறையை நீக்கியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 280 சதவீதம் அதிகரித்து 417 டன்னாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் இறக்குமதியில் 80:20 என்ற விதிமுறையை நீக்கியிருப்பது, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததற்கு பதில் மற்றொரு பொருள் இறக்குமதி அதிகரிக்க வகை செய்துள்ளது என பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலித் தங்கம் விற்கும் இருவர் சிக்கினர்!!
Next post சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!!