அமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு!!

Read Time:3 Minute, 9 Second

90f02af9-a89f-473e-8053-2e58795239a0_S_secvpfஅமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான மந்திரிசபையில், ராணுவ மந்திரியாக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல்.

அமெரிக்காவின் ராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைகளிலும், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலும் ஒபாமாவுக்கும், சக் ஹேகலுக்கும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக சக் ஹேகல், கடந்த 24-ந் தேதி பதவி விலகினார். அவரது ராஜினாமாவை ஒபாமா உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து புதிய ராணுவ மந்திரி யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய ராணுவ மந்திரி பதவிக்கு முன்னாள் ராணுவ துணை மந்திரி ஆஷ்டன் கார்ட்டர், ஜனநாயக கட்சி எம்.பி., ஜேக் ரீட், முன்னாள் ராணுவ உதவி மந்திரி மிச்சேல் உள்ளிட்டவர்கள் பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் (வயது 60) நியமிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், ரூஸ்வெல்ட் அறையில் நேற்று வெளியிட்டார். அப்போது பதவி விலகிய ராணுவ மந்திரி சக் ஹேகலும், புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்கவுள்ள ஆஷ்டன் கார்ட்டரும் உடன் இருந்தனர்.

ஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ஆஷ்டன் கார்ட்டர். ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 2011-2013 காலகட்டத்தில், ராணுவ துணை மந்திரியாக பதவி வகித்தார்.

1954-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் பிறந்தார். அடிப்படையில் இயற்பியல் துறை வல்லுனர். அரசு அதிகாரியாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகவும் பணி ஆற்றியுள்ளார். பல புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

பேட்ஸ் கல்லூரி தலைவர் கிளேடன் ஸ்பென்சரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!!
Next post மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!!